ஆராயுங்கள்
மனாரா இஸ்லாம்

ஸஹீஹ் புகாரி · ஹதீஸ் 3575

ஸஹீஹ்

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ يَزِيدَ، أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ حَضَرَتِ الصَّلاَةُ فَقَامَ مَنْ كَانَ قَرِيبَ الدَّارِ مِنَ الْمَسْجِدِ يَتَوَضَّأُ، وَبَقِيَ قَوْمٌ، فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِخْضَبٍ مِنْ حِجَارَةٍ فِيهِ مَاءٌ، فَوَضَعَ كَفَّهُ فَصَغُرَ الْمِخْضَبُ أَنْ يَبْسُطَ فِيهِ كَفَّهُ، فَضَمَّ أَصَابِعَهُ فَوَضَعَهَا فِي الْمِخْضَبِ، فَتَوَضَّأَ الْقَوْمُ كُلُّهُمْ جَمِيعًا‏.‏ قُلْتُ كَمْ كَانُوا قَالَ ثَمَانُونَ رَجُلاً‏.‏

அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (ஒருமுறை) தொழுகை நேரம் வந்தது. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் வீடு அமைந்திருந்தவர்களெல்லாரும் அங்கத் தூய்மை செய்ய எழுந்தனர். (பள்ளிவாசல் அருகில் வீடில்லாத) ஒரு கூட்டத்தார் (அங்கத் தூய்மை செய்ய வழியறியாமல்) எஞ்சியிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள கல்லால் ஆன ஏனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அதில்) தமது கையை வைத்(துப் பார்த்)தார்கள். அதில் அவர்கள் தமது கரத்தை விரித்து வைக்கும் அளவுக்கு அந்தக் கல் ஏனம் பெரிதாக இருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் தம் விரல்களை இணைத்து கல் ஏனத்தில் வைத்தார்கள். மக்கள் அனை வரும் (அதிலிருந்து) அங்கத் தூய்மை செய்தனர். அறிவிப்பாளர் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான், “அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “எண்பது பேர்' என்று பதிலளித்தார்கள்.88 அத்தியாயம் :

குறிப்பு: நூல் 61, ஹதீஸ் 84படம் உருவாக்குங்கள்JSON

தரம்

ஸஹீஹ் புகாரிஸஹீஹ்

அறிவிப்பாளர் தொடர் (இஸ்னாத்)

இஸ்னாதில் இடம்பெற்றுள்ளபடி அறிவிப்பாளர்கள், தொகுப்பாசிரியர் முதல் நபி ﷺ வரை.

பெயர்கள் அரபு இஸ்னாதில் எழுதப்பட்டுள்ளபடியே தானியங்கியாக எடுக்கப்பட்டவை. வெவ்வேறு நபர்களுக்கு ஒரே பெயர் இருக்கலாம்.

ஒத்த ஹதீஸ்கள்

இந்த ஹதீஸுடன் அரிய சொற்களைப் பகிர்ந்துகொள்ளும், எந்தத் தொகுப்பிலிருந்தும் உள்ள ஹதீஸ்கள்.

رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِخْضَبٍ مِنْ حِجَارَةٍ فِيهِ مَاءٌ، فَصَغُرَ الْمِخْضَبُ أَنْ يَبْسُطَ فِيهِ كَفَّهُ، فَتَوَضَّأَ الْقَوْمُ كُلُّهُمْ‏.‏ قُلْنَا كَمْ كُنْتُمْ قَالَ ثَمَانِينَ وَزِيَادَةً‏.‏

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள் அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்தபோது, தமது வீடு சமீபத்தில் இருந்தவர்கள் எழுந்து (அங்கத் தூய்மை செய்வதற்காக) தம் வீடுகளுக்குச் சென்ற னர். மற்றவர்கள் அங்கேயே (அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில்) இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள ஒரு (சிறிய) கல்பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அந்தப் …

رسول الله صلى الله عليه وسلم بمخضب من حجارة، فصغر المخضب أن يبسط فيه كفه، فتوضأ القوم كلهم‏.‏ قالوا‏:‏ كم كنتم‏؟‏ قال‏:‏ ثمانين وزيادة‏.‏((متفق عليه))، هذه رواية البخاري. وفي رواية مسلم:‏ أن النبي صلى الله عليه وسلم دعا بإناء من ماء، فأتى بقدح رحراح فيه شئ من ماء، فوضع أصابعه فيه‏.‏ قال أنس ‏:‏ فجعلت أنظر إلى الماء ينبع من بين أصابعه ‎، فحزرت من توضأ ما …

Anas bin Malik (May Allah be pleased with him) reported: Once the time for As-Salat (the prayer) approached. Those whose houses were near, went to their houses (to perform Wudu') while some of the people remained with the Messenger of Allah (ﷺ). A stone (containing some water) bowl was brought for him. It was too small for him to spread his hand over it. He …

முழுப் பாடத்தையும் படியுங்கள்