ஆராயுங்கள்
மனாரா இஸ்லாம்

ஸஹீஹ் புகாரி · ஹதீஸ் 421

ஸஹீஹ்

وَقَالَ إِبْرَاهِيمُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَقَالَ ‏"‏ انْثُرُوهُ فِي الْمَسْجِدِ ‏"‏‏.‏ وَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الصَّلاَةِ، وَلَمْ يَلْتَفِتْ إِلَيْهِ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ جَاءَ فَجَلَسَ إِلَيْهِ، فَمَا كَانَ يَرَى أَحَدًا إِلاَّ أَعْطَاهُ، إِذْ جَاءَهُ الْعَبَّاسُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي فَإِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلاً، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ خُذْ ‏"‏‏.‏ فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أُؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعُهُ إِلَىَّ‏.‏ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ‏.‏ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أُؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَىَّ‏.‏ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ‏.‏ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ فَأَلْقَاهُ عَلَى كَاهِلِهِ ثُمَّ انْطَلَقَ، فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا، عَجَبًا مِنْ حِرْصِهِ، فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ‏.‏

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனி-ருந்து (கணிசமான) நிதி கொண்டுவரப் பட்டது. நபி (ஸல்) அவர்கள், “இதைப் பள்ளிவாச-ல் கொட்டிவையுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். -அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வங்களிலேயே அதிகமானதாக இருந்தது.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை ஏறிட்டுப்பார்க்காமல் தொழுகைக் காகச் சென்றார்கள். தொழுகையை முடித்துவிட்டு அந்தச் செல்வம் நோக்கி வந்து (அதன் அருகில்) அமர்ந்துகொண்டு ஒருவர் விடாமல் தாம் காண்பவர்களுக்கெல்லாம் வழங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் பெரிய தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ர் போரில் தங்களால் கைது செய்யப்பட்டபின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்; (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது துணியில் அதை (அள்ளி) அள்ளிப்போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் செல்ல முனைந்தார்கள். அவர் களால் (அதைத் தூக்க) முடியவில்லை. ஆகவே, “அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவரை எனக்கு இதைத் தூக்கிவிடச் சொல்லுங் கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை (நான் யாரிடமும் சொல்லமாட்டேன்)” என்று சொல்-விட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீங்களாவது என் (தோள்)மீது தூக்கிவையுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “இல்லை (முடியாது)” என்று சொல்-விட்டார்கள். பிறகு அதி-ருந்து சிறிதளவைக் கொட்டிவிட்டு. பிறகு அதைத் தூக்கிச் செல்ல முயன்றார்கள். (அப்போதும் அவர்களால் அதைத் தூக்க முடியவில்லை.) எனவே, (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தூக்கி விடுமாறு இவர்களில் ஒருவரிடம் கூறுங்கள்” என்று (மீண்டும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை (கூறமாட்டேன்)” என்று சொல்-விட்டார்கள். “நீங்களாவது என் (தோள்)மீது இதைத் தூக்கிவையுங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “இல்லை (முடியாது)” என்று சொல்-விட்டார்கள். பிறகு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதி-ருந்து இன்னும் சிறிதளவைக் கீழே கொட்டிவிட்டு, அதைத் தூக்கி தம் தோள்கள்மீது வைத்துக்கொண்டு நடக்கலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசை யைக் கண்டு வியப்படைந்து அவர்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே யிருந்தார்கள அங்கு அந்த நிதியி-ருந்து ஒரேயொரு திர்ஹம்கூட எஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்துவிட்ட பின்புதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இடத்தைவிட்டு எழுந்தார்கள். அத்தியாயம் :

குறிப்பு: நூல் 8, ஹதீஸ் 71படம் உருவாக்குங்கள்JSON

தரம்

ஸஹீஹ் புகாரிஸஹீஹ்

அறிவிப்பாளர் தொடர் (இஸ்னாத்)

இஸ்னாதில் இடம்பெற்றுள்ளபடி அறிவிப்பாளர்கள், தொகுப்பாசிரியர் முதல் நபி ﷺ வரை.

  1. ﷺ

    நபி ﷺ

  2. 1
  3. 2
  4. 3
  5. Imam Muhammad ibn Isma'il al-Bukhari

    ஸஹீஹ் புகாரி

பெயர்கள் அரபு இஸ்னாதில் எழுதப்பட்டுள்ளபடியே தானியங்கியாக எடுக்கப்பட்டவை. வெவ்வேறு நபர்களுக்கு ஒரே பெயர் இருக்கலாம்.

ஒத்த ஹதீஸ்கள்

இந்த ஹதீஸுடன் அரிய சொற்களைப் பகிர்ந்துகொள்ளும், எந்தத் தொகுப்பிலிருந்தும் உள்ள ஹதீஸ்கள்.

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنِي رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِي ‏"‏ لَوْ قَدْ جَاءَنَا مَالُ الْبَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا …

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை), ‘‘நம்மிடம் பஹ்ரைனின் நிதி வந்தால் உமக்கு நான் இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்” என்று (மூன்று முறை) என்னிடம் சொல்லியிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் பஹ்ரைனின் நிதி வர, அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் …

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ، فَسَأَلُوهُ أَنْ يَرُدَّ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَسَبْيَهُمْ فَقَالَ ‏"‏ إِنَّ مَعِي مَنْ تَرَوْنَ، وَأَحَبُّ الْحَدِيثِ إِلَىَّ أَصْدَقُهُ، فَاخْتَارُوا إِحْدَى الطَّائِفَتَيْنِ إِمَّا الْمَالَ، وَإِمَّا السَّبْىَ، وَقَدْ كُنْتُ اسْتَأْنَيْتُ بِهِمْ ‏"‏‏.‏ وَكَانَ النَّبِيُّ صلى …

மர்வான் பின் அல்ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது: (ஹுனைன் போருக்குப்பின் அரபுக் குலத்தாரான) யிஹவாஸின்’ குலத்தாரின் தூதுக் குழுவினர் (முஸ்லிலிம்களாகி) தம்மிடம் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். (போரில் தங்களிடமிருந்து முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட) தங்களின் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் தங்களிடமே திருப்பித் தந்துவிடும்படி …

النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ، فَجَاءَهُ الْعَبَّاسُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي فَإِنِّي فَادَيْتُ نَفْسِي، وَفَادَيْتُ عَقِيلاً‏.‏ فَقَالَ ‏ "‏ خُذْ ‏"‏‏.‏ فَأَعْطَاهُ فِي ثَوْبِهِ‏.‏

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (பொது) நிதி கொண்டுவரப்பட்டது. அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு பத்ர் போரில் கைதியாகப் பிடிபட்டபோது) எனக்காகவும் பிணைத் தொகை செலுத்தி யிருக்கிறேன்; (என் சகோதரர்) அகீலுக்காக வும் பிணைத் தொகை …

முழுப் பாடத்தையும் படியுங்கள்