ஆராயுங்கள்
மனாரா இஸ்லாம்

ஸஹீஹ் புகாரி · ஹதீஸ் 425

ஸஹீஹ்

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ الأَنْصَارِيُّ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ ـ وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الأَنْصَارِ ـ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، قَدْ أَنْكَرْتُ بَصَرِي، وَأَنَا أُصَلِّي لِقَوْمِي، فَإِذَا كَانَتِ الأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ، لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ بِهِمْ، وَوَدِدْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ تَأْتِينِي فَتُصَلِّيَ فِي بَيْتِي، فَأَتَّخِذَهُ مُصَلًّى‏.‏ قَالَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ ‏"‏‏.‏ قَالَ عِتْبَانُ فَغَدَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ الْبَيْتَ ثُمَّ قَالَ ‏"‏ أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ ‏"‏‏.‏ قَالَ فَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَكَبَّرَ، فَقُمْنَا فَصَفَّنَا، فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، قَالَ وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرَةٍ صَنَعْنَاهَا لَهُ‏.‏ قَالَ فَثَابَ فِي الْبَيْتِ رِجَالٌ مِنْ أَهْلِ الدَّارِ ذَوُو عَدَدٍ فَاجْتَمَعُوا، فَقَالَ قَائِلٌ مِنْهُمْ أَيْنَ مَالِكُ بْنُ الدُّخَيْشِنِ أَوِ ابْنُ الدُّخْشُنِ فَقَالَ بَعْضُهُمْ ذَلِكَ مُنَافِقٌ لاَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ تَقُلْ ذَلِكَ، أَلاَ تَرَاهُ قَدْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ يُرِيدُ بِذَلِكَ وَجْهَ اللَّهِ ‏"‏‏.‏ قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ‏.‏ قَالَ فَإِنَّا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ إِلَى الْمُنَافِقِينَ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ ‏"‏‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ ثُمَّ سَأَلْتُ الْحُصَيْنَ بْنَ مُحَمَّدٍ الأَنْصَارِيَّ ـ وَهْوَ أَحَدُ بَنِي سَالِمٍ وَهُوَ مِنْ سَرَاتِهِمْ ـ عَنْ حَدِيثِ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، فَصَدَّقَهُ بِذَلِكَ‏.‏

மஹ்மூத் பின் அர்ரபீஉ அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கலந்துகொண்ட அன்சாரி களில் ஒருவரான நபித்தோழர் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது பார்வை (மங்கிப்)போய்விட்டது. நான் என் சமூகத்தாருக்கு (இமாமாக இருந்து) தொழுகை நடத்திவருகிறேன். மழைக் காலங்களில் என(து இல்லத்து)க்கும் அவர்களுக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கில் தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று என்னால் தொழுவிக்க முடியவில்லை. எனவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனது இல்லத்திற்கு வந்து அதில் (ஓர் இடத்தில்) தொழ வேண்டும். அதை நான் தொழு(விக்கு)ம் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) அவ்வாறே நான் செய்வேன்” என்று கூறினார்கள். இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (மறு நாள்) முற்பகல் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (எனது இல்லத்துக்குள்) நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன். வீட்டில் நுழைந்ததும். உட்காராமலேயே, “உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென விரும்புகிறீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். அப்போது நான் அவர்களுக்கு வீட்டின் ஒரு பகுதியைக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விடத்தில்) நின்று ‘தக்பீர் (தஹ்ரீமா)’ கூறினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) அணிவகுத்து நின்றோம். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)துவிட்டு ‘சலாம்’ கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்துவைத்திருந்த ‘கஸீரா’ எனும் (கஞ்சி வகை) உணவி(னை உட்கொள்வத)ற்காக அவர்களை நாங்கள் இருக்கவைத்தோம். (நபியவர்களின் வருகையை அறிந்த) அப்பகுதி மக்களில் கணிசமானோர் வீட்டில் வந்து குழுமிவிட்டனர். அப்போது அவர்களில் ஒருவர், ‘மா-க் பின் துகைஷின்’ அல்லது ‘இப்னு துக்ஷுன்’ எங்கே என்று கேட்டார். மற்றொருவர், “அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைக் காண அவர் வரவில்லை)” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறு சொல்லாதே! அல்லாஹ்வின் அன்பை நாடி, அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்-விட்டிருப்பதை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறிவிட்டு, “அவர் (மாலிக் பின் துக்ஷுன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் (அவர்கள்மீது) அபிமானம் கொண்டிருப்பதையும் காண் கிறோம்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் அன்பை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று யார் சொன்னாரோ அவர்மீது அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிட்டான்” என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு நான் பனூ சா-ம் குலத்தைச் சேர்ந்தவரும் அவர்களின் பிரமுகர்களில் ஒருவருமான ஹுஸைன் பின் முஹம்மத் அல்அன்சாரி (ரஹ்) அவர்களிடம் மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களின் ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அன்னார் சொன்ன ஹதீஸை ஹுஸைன் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் உறுதிப்படுத்தி னார்கள். அத்தியாயம் :

குறிப்பு: நூல் 8, ஹதீஸ் 75படம் உருவாக்குங்கள்JSON

தரம்

ஸஹீஹ் புகாரிஸஹீஹ்

அறிவிப்பாளர் தொடர் (இஸ்னாத்)

இஸ்னாதில் இடம்பெற்றுள்ளபடி அறிவிப்பாளர்கள், தொகுப்பாசிரியர் முதல் நபி ﷺ வரை.

பெயர்கள் அரபு இஸ்னாதில் எழுதப்பட்டுள்ளபடியே தானியங்கியாக எடுக்கப்பட்டவை. வெவ்வேறு நபர்களுக்கு ஒரே பெயர் இருக்கலாம்.

ஒத்த ஹதீஸ்கள்

இந்த ஹதீஸுடன் அரிய சொற்களைப் பகிர்ந்துகொள்ளும், எந்தத் தொகுப்பிலிருந்தும் உள்ள ஹதீஸ்கள்.

النَّبِيِّ صلى الله عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الأَنْصَارِ ـ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَنْكَرْتُ بَصَرِي وَأَنَا أُصَلِّي لِقَوْمِي، فَإِذَا كَانَتِ الأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ، لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ لَهُمْ، فَوَدِدْتُ يَا …

பத்ர் போரில் கலந்துகொண்ட அன்சாரி நபித்தோழர்களில் ஒருவரான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் என் சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் (என் சமூகத்தாரான) அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளம் …

النَّبِيِّ صلى الله عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الأَنْصَارِ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ أَنْكَرْتُ بَصَرِي وَأَنَا أُصَلِّي لِقَوْمِي وَإِذَا كَانَتِ الأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ وَلَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ لَهُمْ وَدِدْتُ أَنَّكَ …

பத்ருப் போரில் கலந்துகொண்ட அன்சாரி நபித்தோழர்களில் ஒருவரான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் (பனூசாலிம்) சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கின்றேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் (என் சமூகத்தாரான) அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் …

رسول الله، صلى الله عليه وسلم، فقلت له ‏:‏ إنى أنكرت بصرى، وإن الوادي الذي بينى وبين قومى يسيل إذا جاءت الأمطار، فيشق على اجتيازه، فوددت أنك تأتي ، فتصلي في بيتي مكاناً أتخذه مصلى، فقال رسول الله صلى الله عليه وسلم ‏:‏‏"‏سأفعل‏"‏، فغدما على رسول الله ، وأبو بكر، رضي الله عنه بعد ما اشتد النهار، واستأذن رسول الله، صلى الله عليه وسلم ، فأذنت له، فلم يجلس حتى …

'Itban bin Malik (May Allah be pleased with him) reported, who was with Messenger of Allah (ﷺ) in the battle of Badr: I used to lead my people at Bani Salim in Salat (prayer) and there was a valley between me and those people. Whenever it rained, it became difficult for me to cross it for going to their mosque. So I went to Messenger of Allah (ﷺ) and said, …

رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، وَعَقَلَ مَجَّةً مَجَّهَا فِي وَجْهِهِ مِنْ بِئْرٍ كَانَتْ فِي دَارِهِمْ‏.‏ فَزَعَمَ مَحْمُودٌ أَنَّهُ سَمِعَ عِتْبَانَ بْنَ مَالِكٍ الأَنْصَارِيّ َ ـ رضى الله عنه ـ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ كُنْتُ أُصَلِّي لِقَوْمِي بِبَنِي سَالِمٍ، وَكَانَ يَحُولُ بَيْنِي …

மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவிருக்கிறது. (நான் சிறுவனாக இருந்தபோது) அவர்கள் என் வீட்டிலிருந்த ஒரு கிணற்றிலிருந்து (ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து தமது வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை (பாசத்தோடு) உமிழ்ந்ததை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.38 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் …

رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، وَعَقَلَ مَجَّةً مَجَّهَا فِي وَجْهِهِ مِنْ بِئْرٍ كَانَتْ فِي دَارِهِمْ‏.‏ فَزَعَمَ مَحْمُودٌ أَنَّهُ سَمِعَ عِتْبَانَ بْنَ مَالِكٍ الأَنْصَارِيّ َ ـ رضى الله عنه ـ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ كُنْتُ أُصَلِّي لِقَوْمِي بِبَنِي سَالِمٍ، وَكَانَ يَحُولُ بَيْنِي …

மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவிருக்கிறது. (நான் சிறுவனாக இருந்தபோது) அவர்கள் என் வீட்டிலிருந்த ஒரு கிணற்றிலிருந்து (ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து தமது வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை (பாசத்தோடு) உமிழ்ந்ததை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.38 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் …

رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ دَلْوٍ فِي بِئْرٍ لَهُمْ - عَنْ عِتْبَانَ بْنِ مَالِكٍ السَّالِمِيِّ - وَكَانَ إِمَامَ قَوْمِهِ بَنِي سَالِمٍ وَكَانَ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ - قَالَ جِئْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ أَنْكَرْتُ مِنْ بَصَرِي وَإِنَّ السَّيْلَ …

Mahmud bin Rabi' Al-Ansari, who remembered that the Messenger of Allah spat a mouthful of water from a bucket into a well that belonged to them, narrated that :'Itban bin Malik As-Salimi who was the chief of his people Banu Salim and had participated in (the battle of) Badr with the Messenger of Allah said: "I came to the Messenger of Allah and said: 'O …

முழுப் பாடத்தையும் படியுங்கள்