ஆராயுங்கள்
மனாரா இஸ்லாம்

ஸஹீஹ் புகாரி · ஹதீஸ் 7529

ஸஹீஹ்

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهْوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ ‏"‏‏.‏ سَمِعْتُ سُفْيَانَ مِرَارًا لَمْ أَسْمَعْهُ يَذْكُرُ الْخَبَرَ وَهْوَ مِنْ صَحِيحِ حَدِيثِهِ‏.‏

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும்பகலும் தானம் செய்கிறார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.168 (இதன் அறிவிப்பாளர்) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் பலமுறை (ஹதீஸ்களைக்) கேட்டுள்ளேன். ஆனால், ‘எனக்கு இன்னார் அறிவித்தார்’ (அக்பரனா அல்லது ஹத்தஸனா) என்று அவர் சொன்னதில்லை. (இன்னார் கூறினார் (கால) என்றே சொல்வார்.) அப்படியிருந்தாலும், அது அவரது ஆதாரபூர்வமான அறிவிப்புதான். அத்தியாயம் :

குறிப்பு: நூல் 97, ஹதீஸ் 154படம் உருவாக்குங்கள்JSON

தரம்

ஸஹீஹ் புகாரிஸஹீஹ்

ஒத்த ஹதீஸ்கள்

இந்த ஹதீஸுடன் அரிய சொற்களைப் பகிர்ந்துகொள்ளும், எந்தத் தொகுப்பிலிருந்தும் உள்ள ஹதீஸ்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَحَاسُدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهْوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، فَهْوَ يَقُولُ لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا، لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ‏.‏ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يُنْفِقُهُ فِي حَقِّهِ فَيَقُولُ لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ …

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!” என்று (ஆதங்கத்துடன்) …

முழுப் பாடத்தையும் படியுங்கள்