حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ذَكَرُوا النَّارَ وَالنَّاقُوسَ، فَذَكَرُوا الْيَهُودَ وَالنَّصَارَى، فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என முஸ்-ம்கள் கருதியபோது) மக்கள் (அக்னி ஆராதனையாளர்களைப் போன்று) நெருப்பு மூட்டலாம் என்றும், (கிறித்தவர்களைப் போன்று) மணியடித்துக் கூப்பிடலாம் என்றும் (ஆலோசனை) கூறினர். (இவையெல்லாம்) யூதர்கள், கிறித்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) எனச் சிலர் (மறுப்புக்) கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு ‘பாங்கு’ (அதான்) எனும் தொழுகை அறிவிப்பிற்குரிய வாசகங்களை (கற்றுத்தந்து அவற்றை) இரு முறை கூறும்படியும் ‘இகாமத்’ (எனும் தொழுகைக்காக …
فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்-ம்கள் (மக்காவி-ருந்து) மதீனாவுக்கு வந்தபோது ஓரிடத்தில் ஒன்றுகூடி, தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒரு நாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறித்த வர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள்” என்று கூறினர். வேறுசிலர், யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக …
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِمَاكِ بْنِ عَطِيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ إِلاَّ الإِقَامَةَ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும் ‘இகாமத்’தின் வாசகங்களை -‘கத் காமத்திஸ் ஸலாத்’ (தொழுகை தொடங்கிவிட்டது) எனும் வாசகத்தைத் தவிர- ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.3 அத்தியாயம் :
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ أَخْبَرَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا كَثُرَ النَّاسُ قَالَ ـ ذَكَرُوا ـ أَنْ يَعْلَمُوا وَقْتَ الصَّلاَةِ بِشَىْءٍ يَعْرِفُونَهُ، فَذَكَرُوا أَنْ يُورُوا نَارًا أَوْ يَضْرِبُوا نَاقُوسًا، فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ.
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மதீனாவில்) மக்களின் எண்ணிக்கை அதிகமானபோது அவர்கள் அறிந்திருக் கின்ற ஏதேனும் ஓர் (அறிவிப்பு) முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்துகொள்ள (அல்லது அறிவிப்புச் செய்திட) ஆலோசித்தனர். அப்போது, “நெருப்பு மூட்டலாம்; அல்லது மணி அடிக்கலாம்” என்று (பல்வேறு யோசனைகளைத்) தெரிவித்தனர். ஆனால், பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும், (‘கத் காமத்திஸ் ஸலாத்’ எனும் வாசகத்தை தவிர) இகாமத்தின் (இதர) வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லும்படி பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அத்தியாயம் :
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ. قَالَ إِسْمَاعِيلُ فَذَكَرْتُ لأَيُّوبَ فَقَالَ إِلاَّ الإِقَامَةَ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும், ‘இகாமத்’தின் வாசகங் களை ஒற்றையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், இஸ்மாயீல் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (கா-த் அல்ஹிதாஉ (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்த) இந்த ஹதீஸை நான் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அவர்கள், “கத் காமத்திஸ் ஸலாத்’ எனும் வாசகத்தை தவிர” என்று (கூடுதலாக) அறிவித்தார்கள். அத்தியாயம் :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قَضَى النِّدَاءَ أَقْبَلَ، حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قَضَى التَّثْوِيبَ أَقْبَلَ حَتَّى يَخْطُرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا. لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ، حَتَّى يَظَلَّ الرَّجُلُ لاَ يَدْرِي كَمْ صَلَّى ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப் பட்டால், தொழுகை அறிவிப்பைக் கேட்காமலிருப்பதற்காக நாற்றவாயு வெளியேறிய வண்ணம் ஷைத்தான் (வெகு தூரத்திற்குப்) பின்வாங்கி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (!பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் ‘இகாமத்’ சொல்லப்பட்டால், பின்வாங்கி ஓடுகிறான். இகாமத் சொல்- முடித்ததும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். “இதை நினைத்துப்பார்; அதை நினைத்துப்பார்” என்று அவர் …
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அபீஸஅஸஆ அல் அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “ஆட்டையும் பாலைவனத்தை யும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் ‘ஆட்டை மேய்த்துக்கொண்டோ’ அல்லது ‘பாலை வனத்திலோ’ இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகை அறிவிப்புச் செய்தால், உங்கள் குரலை உயர்த்தி அறிவியுங்கள். ஏனெனில், தொழுகை அறிவிப்புச் செய்பவரின் குரல் ஒ-க்கும் தொலைவுவரை ஜின்களும் மனிதர்களும் பிற பொருள்களும் அதைக் கேட்டு (தொழுகை) அ(றிவிப்புச் செய்த)வருக்காக மறுமை …
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا غَزَا بِنَا قَوْمًا لَمْ يَكُنْ يَغْزُو بِنَا حَتَّى يُصْبِحَ وَيَنْظُرَ، فَإِنْ سَمِعَ أَذَانًا كَفَّ عَنْهُمْ، وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ عَلَيْهِمْ، قَالَ فَخَرَجْنَا إِلَى خَيْبَرَ فَانْتَهَيْنَا إِلَيْهِمْ لَيْلاً، فَلَمَّا أَصْبَحَ وَلَمْ يَسْمَعْ أَذَانًا رَكِبَ وَرَكِبْتُ خَلْفَ أَبِي طَلْحَةَ، وَإِنَّ قَدَمِي لَتَمَسُّ قَدَمَ النَّبِيِّ صلى الله عليه وسلم. قَالَ فَخَرَجُوا إِلَيْنَا بِمَكَاتِلِهِمْ وَمَسَاحِيهِمْ فَلَمَّا رَأَوُا النَّبِيَّ صلى …
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் சேர்ந்து ஒரு கூட்டத்தாரை நோக்கி போரிடப் புறப்பட்டால் வைகறை (சுப்ஹு) நேரம் வரும்வரை எங்களைப் போரில் ஈடுபடுத்தமாட்டார்கள். (சுப்ஹு நேரம் வரை) காத்திருப்பார்கள். (அப்பகுதியில்) தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால், அவர்களை விட்டுவிடுவார்கள். தொழுகை அறிவிப்பைச் செவியுறாவிட்டால் அவர்கள்மீது தாக்குதல் தொடுப்பார்கள். இந்நிலையில், நாங்கள் கைபரை நோக்கி (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அதிகாலையின்போது தொழுகை அறிவிப்பைச் …
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ ما يَقُولُ الْمُؤَذِّنُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
رَسُولُ اللَّهِ ".
ஈசா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நாள் (தொழுகை அறிவிப்பைச் செவியுற்ற போது) ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்பதுவரை அறிவிப்பாளர் கூறியதைப் போன்றே சொன்னதை நான் கேட்டேன். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் வந்துள்ளது. அத்தியாயம் :
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، نَحْوَهُ. قَالَ يَحْيَى وَحَدَّثَنِي بَعْضُ، إِخْوَانِنَا أَنَّهُ قَالَ لَمَّا قَالَ حَىَّ عَلَى الصَّلاَةِ. قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ. وَقَالَ هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ صلى الله عليه وسلم يَقُولُ.
யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்கள் சகோதரர்களில் ஒருவர் கூறினார்: தொழுகை அறிவிப்பாளர் ‘ஹய்ய அலஸ் ஸலா’ என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்கள் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது) என்று கூறினார்கள். மேலும், “இவ்வாறுதான் உங்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்றும் முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தொழுகை அறிவிப்பைக் கேட்(டு முடிக்)கும்போது, “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸ லாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா (இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும் நிலையான தொழுகைக்கும் உரியவனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) உயர் பதவியையும் தனிச் சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உன்னத இடத்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)” என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் …
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்புச் செய்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசை யி(ல் நிற்பதி)லும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின், (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால், நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின், அதற்கு (தரையில்) தவழ்ந்தாவது வந்து …
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، وَعَبْدِ الْحَمِيدِ، صَاحِبِ الزِّيَادِيِّ وَعَاصِمٍ الأَحْوَلِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ قَالَ خَطَبَنَا ابْنُ عَبَّاسٍ فِي يَوْمٍ رَدْغٍ، فَلَمَّا بَلَغَ الْمُؤَذِّنُ حَىَّ عَلَى الصَّلاَةِ. فَأَمَرَهُ أَنْ يُنَادِيَ الصَّلاَةُ فِي الرِّحَالِ. فَنَظَرَ الْقَوْمُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالَ فَعَلَ هَذَا مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ وَإِنَّهَا عَزْمَةٌ.
அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மழை பெய்து) சேறும் சகதியும் நிறைந்திருந்த ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். தொழுகை அறிவிப்பாளர், ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று சொல்ல முனைந்தபோது, “உங்கள் இருப் பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்) என்று அறிவிக்குமாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை (வியப்புடன்) பார்த்தனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இவரைவிடச் சிறந்தவர் இவ்வாறு …
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ ". ثُمَّ قَالَ وَكَانَ رَجُلاً أَعْمَى لاَ يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ أَصْبَحْتَ أَصْبَحْتَ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ரமளானில்) பிலால், (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும்வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று கூறினார்கள். இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்கள் கண் பார்வையற்றவராக இருந்தார்கள். அவரிடம் “சுப்ஹு நேரமாகிவிட்டது; சுப்ஹு நேரமாகிவிட்டது” என்று சொல்லப் படும்வரை அவர் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்லமாட்டார். அத்தியாயம் :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اعْتَكَفَ الْمُؤَذِّنُ لِلصُّبْحِ وَبَدَا الصُّبْحُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاَةُ.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை அறிவிப்பாளர் சுப்ஹு(த் தொழுகை)க்கான அறிவிப்புச் செய்து முடித்து, வைகறை நேரம் வந்துவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இகாமத்’ சொல்லப்படுவதற்கு முன்பாகச் சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத் கள் (சுன்னத்) தொழுவார்கள். அத்தியாயம் :
النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ.
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழு கையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடை யில் சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். அத்தியாயம் :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ بِلاَلاً يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ ".
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “(ரமளானில்) பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ் ருக்கு) பாங்கு சொல்லும்வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ ـ أَوْ أَحَدًا مِنْكُمْ ـ أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ ـ أَوْ يُنَادِي ـ بِلَيْلٍ، لِيَرْجِعَ قَائِمَكُمْ وَلِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ أَنْ يَقُولَ الْفَجْرُ أَوِ الصُّبْحُ ". وَقَالَ بِأَصَابِعِهِ وَرَفَعَهَا إِلَى فَوْقُ وَطَأْطَأَ إِلَى أَسْفَلُ حَتَّى يَقُولَ هَكَذَا. وَقَالَ زُهَيْرٌ بِسَبَّابَتَيْهِ إِحْدَاهُمَا فَوْقَ الأُخْرَى ثُمَّ مَدَّهَا عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ரமளானில்) உங்களில் ஒருவர் சஹர் உணவு உண்பதி-ருந்து பிலா-ன் பாங்கு அவரைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், உங்களில் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பவர் திரும்புவதற் காகவும் உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்புவதற்காகவுமே பிலால் (பின்) இரவில் ‘அறிவிப்புச் செய்கிறார்’ அல்லது ‘அழைக்கிறார்’. (இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள், தம் விரல்களை மேல்நோக்கி உயர்த்திக்காட்டி, பிறகு கீழ் நோக்கித் தாழ்த்திவிட்டு, “இவ்வாறு …
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ. ح وَحَدَّثَنِي يُوسُفُ بْنُ عِيسَى الْمَرْوَزِيُّ، قَالَ حَدَّثَنَا الْفَضْلُ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ரமளானில்) பிலால் (பின்)இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ்ருக்காக) தொழுகை அறிவிப்பு செய்யும்வரை நீங்கள் (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக வும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ـ ثَلاَثًا ـ لِمَنْ شَاءَ ".
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடை யில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என மூன்று முறை கூறிவிட்டு, “விரும்பிய வருக்கு (அதைத் தொழுதுகொள்ள உரிமை உண்டு)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُمْ كَذَلِكَ يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ شَىْءٌ. قَالَ عُثْمَانُ بْنُ جَبَلَةَ وَأَبُو دَاوُدَ عَنْ شُعْبَةَ لَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلاَّ قَلِيلٌ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்யத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித்தோழர்களில் (முக்கியமான) சிலர் பள்ளிவாச-ன் தூண்களை நோக்கி (அதைத் தடுப்பாக ஆக்கி ‘சுன்னத்’ தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள். அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக இடைவெளி) ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்). இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அவற்றில் …
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ بِالأُولَى مِنْ صَلاَةِ الْفَجْرِ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ بَعْدَ أَنْ يَسْتَبِينَ الْفَجْرُ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلإِقَامَةِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாவது தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்- முடித்ததும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ரு டைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாவது தொழுகை அறிவிப்பான) ‘இகாமத்’ சொல்(- தொழுகை நடத்து)வதற்காகத் தம்மிடம் முஅத்தின் வரும்வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்திருப்பார்கள். அத்தியாயம் :
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ـ ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ ـ لِمَنْ شَاءَ ".
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாவது முறை ‘விரும்பியவருக்கு’ என்றார்கள். அத்தியாயம் :
النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنْ قَوْمِي فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا رَأَى شَوْقَنَا إِلَى أَهَالِينَا قَالَ " ارْجِعُوا فَكُونُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَصَلُّوا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ ".
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் எங்கள் (பனூ லைஸ்) கூட்டத்தார் சிலருடன் (தபூக் போர் ஆயத்தம் நடந்துகொண்டிருக்கையில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நாங்கள் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். -நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவ ராகவும் மென்மையானவராகவும் இருந் தார்கள்.- (பிறகு) எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் (திரும்பிச்) செல்ல ஆசைப்படு வதைக் கண்டபோது நபியவர்கள், “நீங்கள் (உங்கள் குடும்பத்தாரிடம்) திரும்பிச் சென்று அவர்களிடையே (தங்கி) இருங் கள்; அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்; (என்னை எவ்வாறு …
النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ " أَبْرِدْ ". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ " أَبْرِدْ ". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ. فَقَالَ لَهُ " أَبْرِدْ ". حَتَّى سَاوَى الظِّلُّ التُّلُولَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم {إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ}
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு) ‘பாங்கு’ சொல்ல முற்பட்டார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவர் பாங்கு சொல்ல முற்பட்டார். அப்போதும் அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். பிறகு (மூன்றாவது முறையாக) அவர் பாங்கு சொல்ல முற்பட்டபோதும் அவரிடம் “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். …
النَّبِيَّ صلى الله عليه وسلم يُرِيدَانِ السَّفَرَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا فَأَذِّنَا ثُمَّ أَقِيمَا ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا ".
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பயணம் புறப்படவிருந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பயணம் புறப்பட்டுச் செல்லும்போது (தொழுகை நேரம் வந்துவிட்டால்), தொழுகைக்காக ‘பாங்கு’ சொல்-ப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்!” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا أَوْ قَدِ اشْتَقْنَا سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا فَأَخْبَرْنَاهُ قَالَ " ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ ـ وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا ـ وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ …
மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பனூ லைஸ் கூட்டத்தைச் சேர்ந்த) ஒத்த வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். - (பிறகு) நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய நபி (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டுவந்த (எங்கள் குடும்பத்)தவர் களைப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரி வித்தோம். அப்போது நபி …
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ مُؤَذِّنًا يُؤَذِّنُ، ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِهِ، أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ. فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوِ الْمَطِيرَةِ فِي السَّفَرِ.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவை அடுத்துள்ள) ‘ளஜ்னான்’ எனும் இடத்தில் குளிரான ஓர் இரவில் பாங்கு சொன்னார்கள். பிறகு “உங்கள் இருப் பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (‘ஸல்லூ ஃபீ ரிஹா-க்கும்’) என்று அறிவித்தார்கள். மேலும், பயணத்தின்போது குளிரான அல்லது மழை பொழியும் இரவில் தொழுகை அறிவிப்பாளர் பாங்கு சொல்லும்போது பாங்கின் இறுதியில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபீ ரிஹா-க்கும்) என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” …
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِالأَبْطَحِ فَجَاءَهُ بِلاَلٌ فَآذَنَهُ بِالصَّلاَةِ، ثُمَّ خَرَجَ بِلاَلٌ بِالْعَنَزَةِ حَتَّى رَكَزَهَا بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالأَبْطَحِ وَأَقَامَ الصَّلاَةَ.
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் (மக்காவின் புறநகரில்) ‘அப்தஹ்’ எனுமிடத்தில் கண்டேன். (அங்கு இருந்தபோது தொழுகை நேரம் வந்தது). அப்போது பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தொழுகை (நேரம் வந்து விட்டது) பற்றித் தெரிவித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடியுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ‘அப்தஹ்’ எனும் அந்த இடத்தில் (தடுப்பாக) நட்டு வைத்துவிட்டு, தொழுகைக்காக ‘இகாமத்’ சொன்னார்கள். …
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى بِلاَلاً يُؤَذِّنُ فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا بِالأَذَانِ.
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள், பாங்கு சொல்லும்போது (இரு திசைகளிலும் உள்ள மக்களுக்குக் கேட்பதற்காக) தமது வாயை இங்குமங்கும் (வலம் இடமாகத்) திருப்பிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.10 அத்தியாயம் :
النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ فَلَمَّا صَلَّى قَالَ " مَا شَأْنُكُمْ ". قَالُوا اسْتَعْجَلْنَا إِلَى الصَّلاَةِ. قَالَ " فَلاَ تَفْعَلُوا، إِذَا أَتَيْتُمُ الصَّلاَةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا ".
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது (வேகமாக வரும்) சிலரது காலடி ஓசையை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். தொழுது முடித்ததும், “உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சலசலப்பு எழுந்தது)?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)” என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங் கள். (இமாமுடன்) கிடைத்த …
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلاَةِ، وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகைக்காக) ‘இகாமத்’ சொல்வதை நீங்கள் செவியுற்றால் தொழுகைக்கு(ச் சாதாரணமாக) நடந்தே செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். (அவசரப்பட்டு) ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப்போனதை (பின்னர்) நிறைவு செய்யுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டால், என்னை நீங்கள் பார்க்காத வரை எழுந்திருக்க வேண்டாம்.12 “இதை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்” என ஹிஷாம் அத்துஸ்துவாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ ". تَابَعَهُ عَلِيُّ بْنُ الْمُبَارَكِ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப் பட்டால், என்னை நீங்கள் பார்க்காத வரை எழ(வோ செல்லவோ) வேண்டாம்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அத்தியாயம் :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ وَقَدْ أُقِيمَتِ الصَّلاَةُ وَعُدِّلَتِ الصُّفُوفُ، حَتَّى إِذَا قَامَ فِي مُصَلاَّهُ انْتَظَرْنَا أَنْ يُكَبِّرَ انْصَرَفَ قَالَ " عَلَى مَكَانِكُمْ ". فَمَكَثْنَا عَلَى هَيْئَتِنَا حَتَّى خَرَجَ إِلَيْنَا يَنْطُفُ رَأْسُهُ مَاءً وَقَدِ اغْتَسَلَ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டு, தொழுகை வரிசைகள் சீர் செய்யப் பட்டுவிட்டபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் தாம் தொழும் இடத்தில் (போய்) நின்றதும் (முதல்) ‘தக்பீர்’ சொல்வார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், (தாம் பெருந்துடக்கிற்காகக் கடமையான குளியலை நிறைவேற்றாதது நினைவுக்கு வரவே) “அப்படியே இருங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பி (தமது இல்லத்திற்கு)ச் சென்றார்கள். ஆகவே, அவர்கள் நீராடிவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் …
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَقَدَّمَ وَهْوَ جُنُبٌ ثُمَّ قَالَ " عَلَى مَكَانِكُمْ ". فَرَجَعَ فَاغْتَسَلَ ثُمَّ خَرَجَ وَرَأْسُهُ يَقْطُرُ مَاءً فَصَلَّى بِهِمْ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. மக்கள் தம் தொழுகை வரிசைகளை சீர் செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து (தொழுவிப்பதற்காக) முன்னே நின்றார்கள். அப்போது அவர்கள் பெருந்துடக்குடன் இருந்தார்கள். (நினைவு வந்தவுடன்) “அப்படியே இருங்கள்” என்று (மக்களிடம்) கூறிவிட்டு, (தமது இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று நீராடினார்கள். பிறகு தலையி-ருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க(த் திரும்பி) வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அத்தியாயம் :
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَاءَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَوْمَ الْخَنْدَقِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، وَذَلِكَ بَعْدَ مَا أَفْطَرَ الصَّائِمُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَاللَّهِ مَا صَلَّيْتُهَا " فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى بُطْحَانَ وَأَنَا مَعَهُ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى ـ يَعْنِي الْعَصْرَ ـ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! சூரியன் மறையும் நேரம் நெருங்கும்வரை என்னால் (அஸ்ர் தொழுகையைத்) தொழ முடியா மற் போய்விட்டது” என்று கூறினார்கள். அ(வ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறிய)து, நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்திற்குப் பிறகேயாகும். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதைத் தொழ (முடிய)வில்லை” என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ எனும் …
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُنَاجِي رَجُلاً فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ الْقَوْمُ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள் இஷா) தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டது. (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் ஒரு பகுதியில் ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். (எவ்வளவு நேரம் அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்தினார்களெனில்) மக்கள் உறங்கிவிடும்வரை அவர்கள் தொழுகைக்கு (வந்து) நிற்கவில்லை. அத்தியாயம் :
حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ سَأَلْتُ ثَابِتًا الْبُنَانِيَّ عَنِ الرَّجُلِ، يَتَكَلَّمُ بَعْدَ مَا تُقَامُ الصَّلاَةُ فَحَدَّثَنِي عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَعَرَضَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ فَحَبَسَهُ بَعْدَ مَا أُقِيمَتِ الصَّلاَةُ.
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களிடம், தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டபின் பேசிக்கொண்டிருப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப் பட்டபின் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களை (தொழுவிக்க விடாமல்) இடைமறித்(துப் பேசிக்கொண்டிருந்)தார். தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டுவிட்ட பின்னர் (இது நடந்தது). அத்தியாயம் :